பீகாரில் பீதியூட்டும் சம்பவம்.. 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் நடனக் கலைஞர்... 7 நாட்களாக 15 பேரால் பலாத்காரம்


கூட்டுப் பலாத்காரம்

10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் நடனக்கலைஞரை கடத்தி 7 நாட்களாக அறையில் அடைத்து வைத்து 15 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள இசைக்குழுவில் நடனக்கலைஞராக பணிபுரிந்தார். இந்த நிலையில் , கோண்டா செல்லும் வழியில் அரை நிர்வாண நிலையில் திங்களன்று அவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு சாப்ராவில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பீகாரில் உள்ள இசைக்குழுவில் நடனக்கலைஞராக அந்த பெண் பணிபுரிந்ததாகவும், 10,000 ரூபாய்க்காக மற்றொரு இசைக்குழு ஆபரேட்டரிடம் அவர் விற்கப்பட்டுள்ளார். இதையடுத்து சரண் மாவட்டத்தில் உள்ள மஸ்ரக்கில் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கோண்டாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது 15 பேர் கொண்ட கும்பல், பெண் நடனக்கலைஞரை கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து 7 நாட்களாக கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் உடல்நிலை மோசமடைந்து அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனால் கோண்டா செல்லும் வழியில் அரைநிர்வாண நிலையில், அந்த கும்பல் பெண் நடனக்கலைஞரை வீசி விட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

"கூட்டுப் பலாத்கார கும்பல் குறித்து எங்களக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகரத்தில் வழக்கு செய்யப்பட்டதுடன், குற்றவாளிகளில் ஒருவரான நௌஷாத் ஆலம் என்பவரை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளையும், நடனக்கலைஞரை 10,000 ரூபாய்க்கு விற்ற பெண் ஆபரேட்டரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று காவல் துறையினர் கூறினர்.

அறையில் அடைத்து வைத்து ஒரு வாரமாக பெண் நடனக்கலைஞரை 15 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x