சென்னையில் திடீர் நில அதிர்வு... குலுங்கிய அடுக்குமாடி கட்டிடம்... அலறியடித்து ஓடிய மக்கள்!


சென்னையில் நில அதிர்வு

சென்னை கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு குடியிருப்பை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

சென்னை கொரட்டூர் காவல் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கிறது. இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அலறியடித்தபடியே அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி தங்கள் குடும்பத்தினருடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலஅதிர்வுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கட்டிடத்தில் ஏதாவது விரிசல் ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x