உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!


வானிலை அறிவிப்பு

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்னும் 6 மணி நேரத்தில் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மழை

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதைத் தொடர்ந்து, இது வடகிழக்கு திசையில் திரும்பி, நவம்பர் 17-ம் தேதி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும். இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை

இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

x