ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்; ராஜ்நாத் சிங் பங்கேற்பு!


பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஜகார்த்தாவில் நடைபெறும் 10வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வரும் நவம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பையொட்டி, அதில் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளார். இந்த அமர்வுகளின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசியான் அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினராக உள்ளன. மேலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உறுப்பினரல்லாமல் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றன. ஆசியான் பிளஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டு முதல், இதன் அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x