இன்று மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது!


எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. பொதுப் பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சுகாதாரத் துறையின் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணைய தளங்களின் மூலமாக காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 3-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் இந்த கலந்தாய்வில் இணைய வழி மூலம் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற உள்ளது.

x