[X] Close

டிசம்பர் 31-க்குள் டெபிட், கிரெடிட் கார்டை அப்கிரேட் செய்யவேண்டும்: ஏன் தெரியுமா?


you-must-change-your-debit-credit-cards-by-december-3

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Sep, 2018 20:10 pm
  • அ+ அ-

வங்கிகள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் அப்கிரேட் செய்யுமாறு வலியுறுத்தி வருகிறன்றன. ஆனால், நம்மில் பலரும் இது ஏதோ வழக்கமான தகவல் என எண்ணி புறந்தள்ளி வருகிறோம்.

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் பெயரிலேயே அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களை கார்டுகளை அப்கிரேட் செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது. அப்படி டிசம்பர் 31-க்குள் உங்கள் கார்டுகளை நீங்கள் அப்கிரேட் செய்யாவிட்டால் அவை செயலிழந்துவிடும்.

டெபிட், கிரெடிட் கார்டுகளின் ரகசிய தகவலை பாதுகாப்பது என்பது ஆன்லைன் வங்கி மோசடிகளால் சவாலாக உள்ளது. இந்த சூழலில்தான் மக்களின் பணத்தை பாதுகாக்கும் வகையில் ஆர்பிஐ, புதிய சிப் கொண்ட கார்டுகளை பரிந்துரைத்துள்ளது.
இப்போது புழக்கத்தில் உள்ள கார்டுகளில் காந்த பட்டைகளே இருக்கின்றன. இவற்றில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாலேயே சிப் கொண்ட கார்டுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கார்டுகளை இலவசமாகவே அப்கிரேட் செய்துகொள்ளலாம். அதனால், 31-ம் தேதிக்குள் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளை அப்கிரேட் செய்து கொள்ளுங்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close