முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து; விரைவில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!


முஸ்லிம் திருமணம்

அசாமில் கடந்த 1935ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக அம்மாநில அமைச்சர் ஜெயந்தா மல்லபரூஹ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயந்தா மல்லபரூஹ்

நாட்டில் முதல் மாநிலமாக பாஜக ஆளும் உத்தராகண்டில் இம்மாத துவக்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தபட்டது. உத்தராகண்ட் அரசைப் பின்பற்றி பாஜக ஆளும் குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் விரைவில் கொண்டு வரக்கூடும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கடந்த 1935ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஜெயந்தா மல்லபரூஹ், "முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச்சட்டம், 1935 ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்து பதிவுகள், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்” என்று கூறினார்.

ஹிமந்த பிஸ்வ சர்மா

மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த 94 பதிவர்களுக்கும் சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவு சட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண்கள், 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் குழந்தை திருமணத்துக்கு அனுமதித்து வந்தது. பழைய சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் குழந்தை திருமணங்கள் இனி தவிர்க்கப்படும்” என்றார்.

முன்னதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உத்தராகண்ட் போலவே தங்கள் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x