உலக கோப்பையில் களமிறங்குகிறாரா?- இன்ஸ்டாவில் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியிட்ட பும்ரா!


ஜஸ்பிரித் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. தனது வித்தியாசமான பந்துவீச்சு ஸ்டைல் மூலம் கவனம் ஈர்த்தவர். தனது யார்கர் பந்துகளால், பேட்ஸ்மேன்களை திணறடித்தவர்.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு சென்றார். இதன் காரணமாக இவரால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன் தொடர் என பல முக்கிய தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால், இந்திய அணியின் பந்துவீச்சும் பலம் குறைந்து காணப்பட்டது.

இந்தநிலையில் 10 மாத கால ஓய்விற்கு பிறகு பும்ரா மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பந்து வீசி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் அவர் அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரிலும், உலக கோப்பை தொடரிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

x