[X] Close

கொழுக்கட்டை ஏடிஎம்: புனேவில் சுவாரசியம்


modak-atm-at-pune

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 18:36 pm
  • அ+ அ-

கடந்த வாரம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம், புனேவி சஹாகர் நகரைச் சேர்ந்த சஞ்சீவ் குல்கர்னி தனது புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளார்.

ஏடிஎம் போன்ற இயந்திரத்தை உருவாக்கிய அவர், அதில் நுழைக்க விசேஷ கார்டுகளையும் உருவாக்கினார். கார்டை நுழைத்தால் கொழுக்கட்டை வருவது போல இயந்திரத்தை வடிவமைத்தார்.அதில் எண்களுக்குப் பதிலாக மன்னிப்பு, அன்பு, அமைதி, அறிவு, பக்தி, சேவை ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டன.

இதுகுறித்துப் பேசிய குல்கர்னி, ''கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றாகக் கொண்டுசெல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது'' என்றார்.

மோதக் (modak) என்றால் கொழுக்கட்டை என்று பொருள். இந்த புதிய இயந்திரத்துக்கு Any Time Modak (ATM) என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close