[X] Close

அமேசானில் ஆர்எஸ்எஸ் மருந்தகத்தின் பொருட்கள் விற்பனை


rss-backed-pharmacy-in-amazon

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 18:31 pm
  • அ+ அ-

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவுள்ள, தீன தயாள் தாம் என்ற மருந்தகம் அக்டோபர் மாதத்தில் இருந்து பசுமாட்டின் சாணம், கோமியத்தின் மூலம்செய்யப்பட்ட பல்வேறு பொருட்களை அமேசான் தளத்தில் விற்கவுள்ளது.

மாட்டுச் சாணம், கோமியத்தை வைத்து உருவாக்கப்பட்ட குளியல் சோப், ஷாம்பு, முகம் கழுவும் கிரீம், போன்றவற்றை இந்த மருந்தகம், அமேசான் மூலம் விற்பனை செய்யவுள்ளது.

இது பற்றி ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் பேசுகையில், ‘‘பசுமாட்டின் சாணம், கோமியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள், குளியல் சோப், ஷாம்பு, முகம் சுத்தம் கழுவும் பவுடர் உள்ளிட்ட 30 வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த மாதத்தில் இருந்து அமேசான் மூலம் இணையத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இதுதவிர பிரதமர் மோடி அணியும் குர்தா போன்ற ஆடைகள், யோகி ஆதித்யநாத் அணியும் ஜிப்பா போன்ற ஆடைகளயும் விற்பனை செய்யவுள்ளோம்.

இதன் மூலம் உள்நாட்டு மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்கும், ஆன்லைனில் விற்பனைக்கு வரும் போது தேவை அதிகரித்து, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். முதல்கட்டமாக ஒவ்வொரு மாதமும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்துப்பொருட்களையும், மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடைகளையும் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

தீன தயாள் தயாம் மருந்தகத்தின் செயலாளர் மணிஷ் குப்தா கூறுகையில், ‘‘நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்து, உடல்பருமனைக் குறைக்கும் மருந்துகள், சோப்பு, ஷாம்பு, பற்பசை, முகம்சுத்தம் செய்யும் பவுடர், ஊதுபத்தி போன்றவை தயாரித்துள்ளோம்

இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பசுமாட்டின் கோமியம், சாணத்தைச் சேகரித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமாக 90 பசுக்கள் இருக்கின்றன. அதில் 10 வேலையாட்கள் மூலம் சாணம், கோமியம் சேகரிக்கப்படுகிறது. இணையம் மூலம் பசுகோமியத்தின் பொருட்களை விற்பனை செய்யும் போது அதிகமான ஆர்டர் கிடைக்கும் என்று நம்புகிறோம். இங்குத் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை, 10 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மோடி, யோகி ஆடைகள் ஒவ்வொன்றும் 220 ரூபாய்க்கு விற்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close