இணைய வழி முன்பதிவு தொடங்கியது: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை ஜூலை 16-ம் தேதி திறப்பு!


சபரிமலை

சபரிமலை கோயில் நடையானது ஆடிமாத பூஜைக்காக வரும் 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவும் நடந்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாள்களும் திறப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத தரிசனத்திற்காக வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதை ஒட்டி நாளை மறுதினம் மாலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பதினெட்டு படிக்குக் கீழே ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் சபரிமலை ஏறி தரிசனம் செய்வர்.

17-ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். வரும் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படும். ஆடி மாத தரிசனத்திற்கான இணைய வழி முன்பதிவும் இப்போது நடந்து வருகிறது.

x