[X] Close

பாதாள சாக்கடையில் மூச்சுத்திணறி இறந்த தொழிலாளி: ட்ரெண்டாகும் புகைப்படம், நிதி திரட்டும் பிரபலங்கள்


worker-dies-of-asphyxiation

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 17 Sep, 2018 15:19 pm
  • அ+ அ-

டெல்லியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது மூச்சுத் திணறல் காரணமாக 37 வயது, அனில் என்பவர் உயிரிழந்தார்.

மேற்கு டெல்லியில் டாப்ரி என்ற பகுதியில், 20 அடி ஆழ பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய, அந்தப் பகுதியில் வசித்து வரும் சத்பிர் காலா என்பவர், ஒரு கான்ட்ராக்டர் மூலமாக அனில் என்பவரை கூலி கொடுத்து வரவழைத்துள்ளார். அந்த 20 அடி ஆழ சாக்கடையில், இடுப்பில் கயிறு கட்டி இறங்கினார் அனில், கயிறு பலவீனமாக இருந்த காரணத்தால் பாதி வழியிலேயே அறுந்து விழ, அனில் சாக்கடைக்குள் விழுந்தா. அனிலை மீட்கும் முயற்சி கைகொடுக்கவில்லை என்பதால் சதிபிர் போலிஸிடம் தெரிவித்துள்ளார்.

அந்த சாக்கடை வாயில் சிறியது என்பதால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் போராட்டத்துக்குப் பின்னரே அனிலை மீட்க முடிந்தது. ஆனால் அதற்கு அனில் மூச்சுத் திணறி மரணமடைந்திருந்தார். 

இந்தப் பணி தொடங்கும் முன்னர், அந்த கயிறு பாதுகாப்பானதல்ல என்று கான்ட்ராக்டர் சத்பீரிடம் எச்சரித்துள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிக்கு வேறெந்த பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை அமர்த்துவது டெல்லியில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. சத்பீரை போலீஸ் கைது செய்யவுள்ளது.

அனிலின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள், டாப்ரி பகுதியில் ஒரு சிறிய அறையில் வாழ்ந்து வருகின்றனர். அனிலின் நான்கு மாத மகன், ஆறு நாட்களுக்கு முன் நிமோனியா நோய்க்கு பலியானார். தனது கணவர் கண்ணியமான ஒரு பணி செய்ய ஆசைப்பட்டார் என்றும், ஆனால் அவருக்கு சுத்தம் செய்யும் வேலை மட்டுமே தெரியும் என்றும் ராணி கூறினார். அனிலின் இறுதிச் சடங்குக்குக் கூட இவர்களிடம் பணம் இருக்கவில்லை.

சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த ராஜா வாலியா என்பவர் இறுதிச் சடங்குக்கான பண உதவியைச் செய்துள்ளார். 6 பேர் மட்டுமே கலந்து கொண்ட இறுதிச் சடங்கு அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

3 குழந்தைகளுடன் ராணி இனி எப்படி வாழ்வார் என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பலரும் இணையம் மூலமாக, அனில் குடும்பத்தினருக்கு நிதி திரட்டி வருகின்றனர். பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் நிதி திரட்டுவதற்கான லின்க்கை தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அனிலின் உடலுக்கு அருகில் அவரது மகன் நின்று அழும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close