[X] Close

Ooops...புலனாய்வு சொதப்பல்கள்!- கிண்டலடித்த ராகுல் காந்தி


gujarat-cadre-officer-is-the-pm-s-blue-eyed-boy-in-the-cbi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 15:09 pm
  • அ+ அ-

விஜய் மல்லையாவை தப்பவிட்டது யார்? விடை தெரியா இந்த கேள்விதான் டெல்லி அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை விவாதப் பொருள். மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல அருண் ஜேட்லி தான் காரணம் எனக் கூறினார் ராகுல் காந்தி.

தற்போது, "சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.சர்மாதான் மல்லையாவின் லுக் அவுட் நோட்டீஸை வலுவிழக்கச் செய்து அவரை தப்பிக்கச் செய்தார். குஜராத்தைச் சேர்ந்த அதிகாரியான சர்மா, சிபிஐ அலுவலகத்தில் பிரதமரின் செல்லப் பிள்ளை. இதே அலுவலர்தான் நிரவ் மோடி, மெஹூல் சோஸ்கி தப்பிக்கவும் திட்டம் வகுத்தவர். இதுதான் புலனாய்வு சொதப்பல்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

இந்நிலையில், லண்டனில் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, லண்டன் வருவதற்கு முன்பாக தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close