பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது - வெளியானது முக்கிய அறிவிப்பு


சென்னை: தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆக.29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்.2-ம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரதான அலுவலகம் உள்பட அனைத்து மண்டல அலுவலகங்களில் இயங்கும் பொது விசாரணை அரங்குகள் ஆகஸ்ட் 30 மட்டும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காததன் காரணமாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நேர்காணல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து ஆவண சரிபார்ப்பு நேர்காணலுக்கு முன்பதிவு செய்திருந்தவர்கள், பிற நாள்களில் தங்கள் நேர்காணலை மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


x