[X] Close
 

மல்லையா வந்தார், சந்தித்தார், பறந்தார்!- காங்கிரஸ் கிண்டல்


i-came-i-saw-i-flew-mallaya

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 11:56 am
  • அ+ அ-

முகலாய மன்னர்கள் படையெடுப்பைக் குறிப்பிடும் பிரபல வாக்கியத்தோடு ஒப்பிட்டு மல்லையா நாடாளுமன்றத்துக்கு வந்தார், மல்லையா ஜேட்லியை சந்தித்தார், மல்லையா லண்டன் பறந்தார் என கிண்டல் செய்திருக்கிறது காங்கிரஸ்.

விஜய மல்லையா லண்டன் தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பாக அருண் ஜேட்லியின் பெயர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் கிண்டல் மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு மீமில் அண்மையில் பாஜக வெளியிட்ட பெட்ரோல் விலை கிராஃபை எடிட் செய்து அதில் மல்லையா உயரே பறப்பதுபோல் மாற்றியுள்ளனர். அந்த படத்தின் மேல் உங்களுக்கு பறப்பதற்கு றெக்கை கொடுத்தவர் அருண் ஜேட்லி எனப் பதிவிட்டுள்ளனர். #ArunJaitleyStepDown என்ற ஹேஷ்டேக் கீழ் இவற்றைப் பதிவிட்டுள்ளனர்.

இன்னொரு ட்வீட்டில் மல்லையா தனது நினைவுகளைப் பகிர்வதுபோல் ஒரு படம் வெளியிட்டு அதன் கீழ் நான் நாடாளுமன்றம் வந்தேன், ஜேட்லியை சந்தித்தேன், லண்டன் பறந்தேன் என கிண்டல் செய்துள்ளனர்.

முகலாய மன்னர்கள் படையெடுப்பு They came They saw They conquered என்று சொல்வார்கள் அதே பாணியில் மல்லையாவும் வந்தேன், சந்தித்தேன், பறந்தேன் எனப் பதிவிட்டுள்ளனர்.

3-வது மீமில் கோல்மால் திரைப்படத்தில் போஸ்டரில் அமித்ஷா, நிரவ் மோடி, அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, பிரதமர் மோடி என போஸ்டர் மாற்றி வடிவமைக்கப்பட்டு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

தப்பி ஓடிய மல்லையா:
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

இந்நிலையில், லண்டனில் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, லண்டன் வருவதற்கு முன்பாக தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது.

கொளுத்திப் போட்ட சு.சுவாமி:
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி, "இப்போது நம்மிடம் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன. 1. லுக் அவுட் நோட்டீஸ் அக்டோபர் 24, 2015-ல் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. அதாவது தடை உத்தரவு, தெரிவிப்பு உத்தரவாக எப்படி மாறியது. இதுதான் மல்லையா செக் செய்யப்பட்ட தன் 54 லக்கேஜ்களுடன் தப்பிச் செல்ல காரணமானது. 2. நாடாளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில் நிதியமைச்சரிடம் தான் லண்டன் செல்வதாக மல்லையா தெரிவித்தது" என்று 2 மறுக்க முடியா உண்மைகள் உள்ளதாக தெரிவித்தார்.

[X] Close