யானைகள் நடமாட்டம்; பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை!


பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வார விடுமுறை நாளையொட்டி மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நிலவும் இதமான சூழலை அனுபவிப்பதுடன் பல்வேறு சுற்றுலா அமைவிடங்களுக்கும் சென்று ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ள சுற்றுலா பயணிகள் மழை மீது அமைந்துள்ள பேரிஜம் ஏரியின் அழகினையும் கண்டு ரசித்து செல்வார்கள்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் உலவுவதால் வனத்துறையினரின் அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு செல்ல முடியும்.

இந்நிலையில் வார விடுமுறை தினமான இன்று கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல அனுமதி பெற காத்திருந்தனர். ஆனால் பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதித்திருப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் ஏரியை காணவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

x