உஷார்; தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழை இன்று கொட்டப் போகிறது: வானிலை மையம் எச்சரிக்கை!


மழை

தமிழகத்தின் பல்வேறும் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிவிப்பு

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘’வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.

x