[X] Close
 

பெட்ரோல் கணக்கை விடுங்க யோகி சொல்லும் கரும்பு கணக்கைப் பாருங்க!


sugarcane-leads-to-diabetes-grow-something-else-cm-yogi-adityanath-to-up-farmers

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 16:50 pm
  • அ+ அ-

கரும்பை அதிகம் விளைவிப்பதாலேயே சர்க்கரை அதிகமாக உற்பத்தியாகிறது. அதிகமாக உற்பத்தியாவதாலேயே அதனை அதிகமாக உட்கொண்டு மக்களும் சர்க்கரை நோய்க்கு உள்ளாகின்றனர். இதை சொன்னவர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், "நீங்கள் (விவசாயிகள்) கரும்பையே அதிகமாக விளைவிக்கிறீர்கள். இதனாலேயே சர்க்கரை உற்பத்தியும் அதிமாகிறது. அதனால் சர்க்கரை நுகர்வும் அதிகமாகிறது இறுதியாக சர்க்கரை நோயும் வந்துவிடுகிறது" எனக் கூறினார்.

மேலும், உ.பி. விவசாயிகள் கரும்பை விடுத்து வேறு காய்கறிகள் போன்ற பயிர்களை பயிரிட வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

அண்மையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு பாஜக போட்ட ட்வீட்டை வைத்து இன்றுவரை கலாய்த்துக் கொண்டிருந்த நெட்டிசன்கள் தற்போது யோகியை கிண்டல் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்.

[X] Close