ஒவ்வொரு முறையும் வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது அளவில் மிகவும் சிறியதாக, குழந்தைகள் ஓட்டுவது போல் இருக்கும் மினி புல்லட் ஒன்றை ஒருவர் ஓட்டி செல்லும் வீடியோ வைரல் ஆகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ராம்மி ரைடர் (@rammyryder) என்ற பயனர் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள தெருவில் ஒரு நபர் ஒரு சிறிய இளஞ்சிவப்பு நிற புல்லட்டை மிகவும் வசதியாக ஓட்டிச் செல்வதை இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "இந்தியாவில் மினி புல்லட்" என்று அந்த வீடியோ கிளிப்பில் பதிவு செய்துள்ளார்.
இந்த பைக் சைக்கிளை விட சிறியதாக உள்ளது போல் தெரிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆக்டிவா ஸ்கூட்டரில் இருந்து அவர் இந்த பைக்கை உருவாக்கி உள்ளார். தனித்துவமான இந்த மினி பிங்க் புல்லட்டை உருவாக்க அவரது பழைய வண்டியை மாற்றியமைத்துள்ளார்.
இந்த புல்லட் தெருவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த வீடியோ 4,25,000 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.