பிரதமர் மோடி ஓபிசி அல்ல; மக்களை ஏமாற்றுகிறார்... ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!


ராகுல் காந்தி

பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) குடும்பத்தில் பிறக்கவில்லை என்றும், அவர் தன்னை ஓபிசி என கூறி மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒடிசா மாநிலம், ஜார்சுகுடாவில் இன்று பாரத் ஜோடா நியாய யாத்திரை நடைப்பயணத்தில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி, தன்னை ஓபிசி என கூறி மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். அவர் 'தெலி' சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். இது, கடந்த 2000ம் ஆண்டில் குஜராத்தில் பாஜக ஆட்சிக்காலத்தில் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது. எனவே, பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி அல்ல. பிரதமர் மோடி ஓபிசி பிரிவினருடன் கைகுலுக்குவதில்லை. ஆனால் பில்லியனர்களை கட்டிப்பிடிக்கிறார்” என்று கூறினார்

ராகுல் நிகழ்ச்சியில் திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்.

ஜார்சுகுடா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. திறந்த ஜீப்பில் நின்றவாறு கிசான் சௌக்கை நோக்கி ராகுல் காந்தி சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர் அஜய்குமார், ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரத் பட்நாயக் ஆகியோர் சென்றனர்.

ராகுல் காந்தியின் யாத்திரை பிற்பகலில் ஒடிசாவிலிருந்து சத்தீஸ்கர் எல்லையை நோக்கிச் சென்றது.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

x