சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாட்டின் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்கூர், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சிய்ல் பேசிய திரெளபதி முர்மு, 'சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் இருந்தே தென்னிந்தியாவின் கடல் வழி வணிகம் நடைபெற்று வந்துள்ளது. 7,500 கி.மீ கடல் எல்லை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. கடல் வழி பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கடல் வழி வணிகத்தில் உலகளவில் இந்தியா இரண்டாவது சிறப்பான நாடாக இருக்கிறது. நம் நாடு கடல் வழி வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சோழ, சேர, பாண்டிய சாம்ராஜ்யத்தில் வணிகம் மட்டும் அல்ல, கலாச்சார பண்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும். சாகர்மாலா திட்டம் கடல் வழி வணிகத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். படித்து பட்டம் பெறுவது மிகவும் பெருமை வாய்ந்தது. அதோடு சமூக பெறுப்பும், கடல் சார் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தவும் வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!