பாஜகவுடன் கூட்டணி என்ற செய்தியால் வேதனையடைந்தேன்... நிதீஷ் குமார் ஆதங்கம்!


நிதீஷ் குமார்

பாஜக உடன் கூட்டணி என்ற செய்திகளைப் படித்த போது நான் வேதனையடைந்தேன் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகாரில் மத்திய பல்கலைக்கழகம் அமைய மத்திய பாஜக அரசுதான் காரணம். அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை. 2014ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பணிகள் நடைபெற்றன என மஹாத்மா காந்தி பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பேசினார். இதையடுத்து, நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது. பட்டமளிப்பு விழா குறித்து வெளியான செய்தியில், மத்திய அரசை பாராட்டி பேசியதால் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டு இருந்தது.

நிதிஷ் குமார்

இது குறித்து நிதிஷ் குமாரிடம் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' மஹாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எனது உரை பற்றிய செய்திகளைப் படித்தபோது நான் வேதனையடைந்தேன். அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கயாவில் மட்டும் ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை அமைக்க விரும்பியதை நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்பினேன். நான் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவது கிடையாது'' என பதில் அளித்தார்.

x