உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இன்று சென்றார். அவர் அதிகாலையில் கோயிலில் நடக்கும் பஸ்ம ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொண்டார்.
அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் பஸ்ம ஆரத்தி வழிபாடு கோயிலின் நந்தி மண்டபத்தில் நடைபெறும். இந்த சிறப்பு வழிபாட்டில் தனது மனைவியுடன் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். ஆரத்தி பூஜைக்குப் பின்னர் ஆளுநர் தன் மனைவியுடன் கோயிலின் கருவறைக்குச் சென்று சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார். பின்னர், கோயில் நிர்வாகிகள் குழு தமிழக ஆளுநரை கௌரவித்து, சுவாமி மகாகாளேஷ்வரரின் படத்தையும் பிரசாதங்களையும் வழங்கினர்.