விமானிகள் இனிமேல் இதை செய்யக்கூடாதாமே- திடீரென ஏன் இந்த தடை?


விமானிகளுக்கு கட்டுப்பாடு

விமானத்தை இயக்கும் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பெர்ஃப்யூம் எனப்படும் வாசனை திரவியங்களை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.

உள்நாட்டில் இயக்கப்படும் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் விமானத்தில் பணிக்கு ஏறுவதற்கு முன்பாக பிரீத் அனலைசர் எனப்படும் மூச்சு பரிசோதனை நடைபெறுவது வழக்கம். தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு விமானத்தை இயக்குவது ஆகியவற்றை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பல விமான நிறுவனங்கள், தடை செய்யப்பட்ட மருந்துகள், வாய் கொப்பளிக்க பயன்படுத்தும் மவுத்வாஷுகள், பல் துலக்க பயன்படுத்தப்படும் ஜெல்கள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.

விமானிகளுக்கு கட்டுப்பாடு

இவற்றை பயன்படுத்துவதன் காரணமாக பிரீத அனலைசர் சோதனையின் போது, ஆல்கஹால் அளவு அதிகரித்துக் காட்டுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அதிக மனம் பரப்பக்கூடிய வாசனை திரவியங்களில் பொதுவாக ஆல்கஹால்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என விமானங்களுக்கு அறிவுறுத்த டிசிஜிஏ முடிவு செய்துள்ளது. தற்போதைக்கு இந்த முடிவு விமான சேவை நிறுவனங்கள் மற்றும் அதன் பங்கீட்டாளர்கள், கருத்து தெரிவிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் வாசனை திரவியங்கள் பயன்படுத்த டிசிஜிஏ தடை விதிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

x