[X] Close
 

கேரளா கனமழை: அறிக 10 தகவல்கள்


kerala-rains-10-points

  • பாரதி
  • Posted: 10 Aug, 2018 15:33 pm
  • அ+ அ-

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

1. இடுக்கி மாவட்டத்தின் மூனாறில் 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 69 பயணிகள் சிக்கியுள்ளனர். நிலச்சரிவு காரணமாக அவர்கள் தங்கியுள்ள ரிசார்ட்டை அடையமுடியாத நிலை உள்ளது. அவர்களை காப்பாற்ற ராணுவம் விரைந்துள்ளது.

2. கடந்த 50 ஆண்டுகளில் கேரளாவில் இந்த அளவு மழை பெய்ததில்லை என கேரள மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

3. இடுக்கி அணையின் மேலும் 2 மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. நீரின் அழுத்தத்தைக் குறைக்கவே சில மணி நேரங்கள் மட்டும் கூடுதலாக இரண்டு மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக் கேரள நீர்வளத்துறை அமைச்சர் மணி தெரிவித்திருக்கிறார்.

4. இடுக்கியில் 11 பேர் உட்பட இதுவரை 26 பேர் கேரளாவில் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.

5. நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் கேரளா அனுப்பப்பட்டுள்ளன. கடலோர காவற்படையினரும் மற்ற முப்படையினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

6. சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் தனது நாட்டு மக்கள் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என் சுற்றுலா முன்னறிவிப்பு விடுத்துள்ளது.

7. கடந்த சில நாட்களில் மட்டும் 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

8. இடுக்கிவாசி ஒருவர் கூறும்போது 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துவருகிறது எனக் கூறியிருக்கிறார். இடுக்கியில் தொடர்ந்து மழை பெய்தாலும்கூட பேருந்து சேவைகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

9. இடுக்கி அணையின் அனைத்து மதகுகளும் ஒருசேர திறக்கப்படுவது 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.

10. வயநாடு, மலப்புரம் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close