அந்தமானுக்கு என்னதான் ஆச்சு? - அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அதிரும் தீவுக்கூட்டம்!


நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் விரிகுடாவில் இன்று அதிகாலையில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியத்திலிருந்து 6வது முறையாக நிலநடுக்கம் தாக்குவதால் அந்தமான் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் விரிகுடாவில் திங்கள்கிழமை அதிகாலையில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல இன்று அதிகாலையில் மிசோரமில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

தேசிய நிலநடுக்க மையத்தின் தகவல்களின்படி, கேம்ப்பெல் விரிகுடாவுக்கு வடக்கே 220 கிமீ தொலையில், 32 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மிசோரமில் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் நேற்று பிற்பகலில் இருந்து 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று அதிகாலை 1 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் 2.30 மணிக்கு இன்னொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகும் காரணத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

x