பில்லி, சூனியம் வைத்ததாக அச்சம்: பெரியம்மாவை கொலை செய்த வாலிபரின் ஆயுள்தண்டனை ரத்து


பில்லி, சூனியம்

பில்லி சூனியம் வைத்ததாக கூறி பெரியம்மாவை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். ஆண்வாரிசு இருக்கக்கூடாது என்பதற்காக பில்லி, சூனியம் வைத்ததாகக்கூறி, தனது பெரியம்மாவை கடந்த 2009-ம் ஆண்டு கத்தியால் குத்தி சதீஷ் கொலை செய்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், சதீஷீக்கு ஆயுள்தண்டனை விதித்து 2010 நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல்குமார் அமர்வு, சதீஷீக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர். சதீஷ் தான் கொலை செய்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

x