பிபிசி ஊடக நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் 3 நாட்களாக நீடித்த வருமான வரித்துறையினரின் சோதனை நேற்றிரவு முடிந்ததை அடுத்து இன்று அறிக்கை வெளியாகு எனத் தெரிகிறது.
சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசியின் இந்திய அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறையினரின் ஆய்வு செவ்வாய் இரவு தொடங்கியது. ஆய்வு அல்ல ‘சர்வே’ மட்டுமே மேற்கொள்கிறோம் என்ற விளக்குத்துடனான அவை நடைபெற்றன. பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்கள் அதையொட்டிய 2 அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் இரவு பகலாக முகாமிட்டிருந்தனர்.
இது தொடர்பாக பிபிசி தரப்பில் வெளியான தகவலில், ’வருமான வரித்துறையினரின் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். எவருக்கும் எதிராகவோ, சார்பாக அன்றி எங்களுடைய பணிகள் தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊடக நிறுவனத்தின் ஒரு சில மூத்த அதிகாரிகள் தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
பிபிசி அலுவலகங்களின் டிஜிட்டல் தரவுகளை சேகரித்த வருமான வரித்துறையினர், ஊடக நிறுவனத்தினரின் கணினி மற்றும் மொபைல் போனிலும் சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை அதிகாரிகளும் அங்கேயே இரவு நெடுக தங்கியிருந்த தொடர்ந்த சோதனை நேற்றிரவு நிறைவுற்றது. இதனையடுத்து சோதனை விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவலகள், வருமான வரித்துறை சார்பில் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.