மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களின் வரிகளில் மாற்றங்களை அறிவித்தார். இதன் காரணமாக சில பொருட்களின் விலை குறையும், சில பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்பொருட்களின் விலை குறையும்? எப்பொருட்களின் விலை அதிகரிக்கும்?
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களின் வரிகளில் மாற்றங்களை அறிவித்தார். இதன் காரணமாக சில பொருட்களின் விலை குறையும், சில பொருட்களின் விலை விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்:
டிவி பேனல்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, இதனால் அவற்றின் விலை குறையும்.
மொபைல் போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது, இதனால் அவற்றின் விலை குறையும்.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் அடிப்படை சுங்க வரியை அரசு குறைக்கிறது, இதனால் வைரத்தின் விலை குறையும்.
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம், அயன் பேட்டரிகளின் இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
பொம்மைகள், சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது
விலை அதிகமாகும் பொருட்கள்:
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான வரி 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் அவற்றின் விலை உயரும்.
கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது
தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பித்தளை போன்ற பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது
ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.