அலங்காநல்லூரில் சாதித்த சிவகங்கை மாடுபிடி வீரர்: 26 காளைகளை அடக்கி காரை தட்டிச்சென்றார்


காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. 26 காளைகளை அடக்கிய சிவகங்கையை சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் முதல் பரிசான காரை தட்டி சென்றார்.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்றன. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து வந்து அடக்கினர். பல காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. ஒவ்வொரு சுற்றிலும் அசத்தி வந்த சிவகங்கை மாவட்டம் சேர்ந்த அபுசித்தர் அபாரமாக காளைகளை பிடித்து அசத்தார். அடுத்து 20 காளைகளை அடக்கிய ஏலாதியைச் சேர்ந்த அஜய் என்ற வாலிபர் இரண்டாம் இடத்தை பிடித்தார். அலங்காநல்லூரை சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தை பிடித்தார். குறிப்பாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு வழங்கப்பட்டது.

முதலிடம் பிடித்த அபுசித்தருக்கு காரும், 2-வது இடத்தைப்பிடித்த அஜய்க்கும், 3-வது இடத்தைப்பிடித்த ரஞ்சித்துக்கும் பைக்குகள் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக முதல் பரிசான காரை சென்றது புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வனின் காளை. 2-வது இடம் பிடித்த காளையின் உரிமையாளர் எம்.எல்.சுரேஷுக்கும், 3-வது இடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் பரிசுகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

மேலும் பல்வேறு பரிசு பொருட்களையும் மாடுபிடி உரிமையாளர்கள் மாடு வீடு வீரர்கள் அள்ளிச்சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 820 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. 53 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழப்பின்றி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிப்போட்டி நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2-வது பரிசு வென்ற அஜய்

x