தமிழி எழுத்தில் கோலமிட்டு அசத்திய அரசுப்பள்ளி மாணவிகள்: கவர்ந்த சமத்துவப் பொங்கல் விழா!


ராமநாதபுரம் அருகே நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் தமிழி எழுத்தில் கோலமிட்டு மாணவியர் அசத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் இன்று சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி வந்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாணவியர் வரைந்த வாழ்த்து கோலம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் பழமையான தமிழி எழுத்துகளை எழுத, படிக்கத் தெரிந்த 8-ம் வகுப்பு மாணவிகள் தீபிகாஸ்ரீ, பார்னியா ஸ்ரீ, வித்யா ஆகியோர் தலைமையில் வகுப்பறை முன் தொன்மை வாய்ந்த தமிழி எழுத்துகளால் இனிய பொங்கல் வாழ்த்து என எழுதி இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இதன் பின்னர் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.

x