தமிழகத்திலிருந்து சென்ற ஐஸ் போதைப்பொருள் இலங்கையில் பறிமுதல்: கும்பல் தலைவன் சிக்கியது எப்படி?


தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய 2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை இலங்கை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வந்து புத்தளம் கடற்கரையில் இருந்து ஆட்டோவில் ஐஸ் போதைப் பொருள் கடத்தி வருவதாக சிறப்பு புலனாய்வு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கற்பிட்டி போலீஸாருக்கு, சிறப்பு போலீஸார் தெரிவித்தனர். இதனடிப்படையில், கற்பிட்டி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ ஐஸ் போதை பொருளை போலீஸார் கைப்பற்றினர்.

ஐஸ் போதைப் பொருளை ஆட்டோவில் கடத்தி வந்த கற்பிட்டி துரையடி, மட்டக்குழி பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் போதை பொருட்கள் விற்பனையில் பிரபலமானர் எனவும், போலீஸாரால் பல முறை கைது செய்யப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள், ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கற்பிட்டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x