கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு!


புதுடெல்லி: 2024-2025ம் நிதியாண்டில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2024-2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது: நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தல் வெற்றி.

2024-2025 பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். இந்தியாவில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது.

பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.” இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்து வருகிறார்.

x