திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பூதத்தான் என்ற மாணவன், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பூவலிங்கம் மகன் பூதத்தான் (வயது 17), தான் படித்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி அருகே எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவன், அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
இந்த மாணவன் ஏற்கெனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தாலுகா அலுவலகம், கல்வி அலுவலகம் உள்ளிட்டவற்றின் மேல் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.