திண்டுக்கல் மூதாட்டியிடம் 1.9 லட்சம் இணையமோசடி: பணத்தை மீட்ட போலீஸார்


திண்டுக்கல்லில் இணைய வழி மோசடி மூலம் இழந்த தொகையை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் லட்சுமணபுரத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (61). இவர் தனது வங்கி கணக்கு பணபரிவர்த்தனைகளை ரகசிய எண் மூலம் செயல்படுத்தி வந்தார். இந்நிலையில், இவரது கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் இணைய வழி மூலம் மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீிஸில் மல்லிகா புகார் அளித்தார். இதன் அடிப்படையில், எஸ்.பி பாஸ்கரன் அறிவுறுத்தல் படி, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட ரூ.1.09 லட்சத்தை மல்லிகாவிடம் எஸ்.பி பாஸ்கரன் ஒப்படைத்தார். வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் செயலி மூலம் கையாளும் போது மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இணையதளச் செயல்பாடுகளை சரி வர கையாள தெரியாதோர் இணைய வழி பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என எஸ்.பி பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

x