[X] Close

காங். எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்ற கோவா முதல்வர்: அமித் ஷாவுடன் சந்திப்பு


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:13 am
  • அ+ அ-

கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் பிளவு ஏற்பட்டது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் உட்பட காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் இந்த எம்எல்ஏக்களுடன் முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று டெல்லி வந்தார். பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை இவர்கள் சந்தித்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமித்ஷாவை பிரமோத் சாவந்த் சந்தித்துப் பேசினார். 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 17-ல் இருந்து தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் பெரும்பான்மைக்கு கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளை இனி பாஜக சார்ந்திருக்க வேண்டியதில்லை. இந்நிலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காக, கூட்டணிக் கட்சியினரை அமைச்சரவையில் இருந்து பாஜக நீக்கலாம் என கூறப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார். ஆனால் இது ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close