ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு: நகைப்பிரியர்கள் கலக்கம்


தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் வாடிக்கையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,089 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 40,712 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,550 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

x