[X] Close

குடிக்க வேண்டாம்!- கேரள சட்டப்பேரவையில் சொந்தக்கதையை சொல்லிய எம்.எல்.ஏ.,


kerala-mla-narrates-family-tales-to-highlight-problems-of-liquor-addiction

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 13:03 pm
  • அ+ அ-

கேரள சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டம் தொடர்பான விவாததின் போது குடியினால் ஏற்படும் தீமைகள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., தனது அனுபவத்தைப் பகிர்ந்து நெகிழவைத்தார்.

கேரள சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கேரளாவில் மது அருந்துவதற்கான வயது 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், அதேவேளையில் கோயில்கள், வழிபட்டுத்தலங்களில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மதுபானக் கடைகள் என்ற கெடுபிடியை தளர்த்தி 50 மீட்டரில் தொலைவிலேயே மதுபானக் கடைகளை அமைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டதிருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., அனில் அக்கரா, "எனது அப்பா, தாத்தா இருவருமே குடிபோதைக்கு அடிமையானவர்களே. எனது அப்பா தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை நாங்கள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து பெற்றபோது இருவரும் கதறித் துடித்தோம். எனது தாத்தாவும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாலேயே இறந்தார். இப்படி நாங்கள் குடியினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த அரசு எங்களைப் போன்ற குடியினால் பாதிக்கப்பட்டோரின் நலனைப் பற்றி யோசிக்காமல் மதுவிற்பனையை ஊக்கப்படுத்துவதிலும் பார் வேலையாட்கள் நலனைப் பேணுவதிலுமே கவனம் காட்டுகிறது" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close