[X] Close

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது: பாபா ராம்தேவின் சர்ச்சை ட்வீட்


ramdev-backs-sterlite

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 12:13 pm
  • அ+ அ-

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த பொருட்கள் வேண்டாம் ஆயுர்வேதப் பொருட்களையே பயன்படுத்துங்கள் என்றுதான் பாபா ராம்தேவ் தனது பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களை இந்தியா முழுவதும் சந்து சந்தாக கடைவிரித்து விற்பனை செய்து வருகிறார்.

ஆனால், அண்மையில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலை சந்தித்த அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் 100-வது நாளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனையடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. ஆனால், பாபா ராம்தேவோ ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் லண்டன் சென்ற பாபா ராம்தேவ், வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வாலை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராம்தேவின் சர்ச்சை ட்வீட்கள்:
லண்டன் சென்றபோது அனில் அகர்வாலை சந்தித்தேன். லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி தேசத்தை கட்டமைக்கும் அவரது பங்களிப்புக்கு எனது வணக்கங்கள். 
தென்னிந்தியாவில் வேதாந்தா குழுமத்தின் ஆலைக்கு சர்வதேச சதிகாரர்கள் அப்பாவி மக்கள் வாயிலாக குழப்பத்தை விளைவித்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். தொழிற்சாலைகள்தான் தேசத்தின் வளர்ச்சிக்கான கோயில். அதை மூடக்கூடாது.
இவ்வாறு அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

தூத்துக்குடி என்றோ தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை என்றோ அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் தென்னிந்தியாவில் உள்ள வேதாந்தா குழுமத்தின் ஆலை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close