[X] Close

அனுஷ்கா, விராட் கோலிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நபர்; ஃபேஸ்புக்கிலும் வறுத்தெடுத்தார்


anushka-sharma-virat-kohli-get-legal-notice-from-man-she-shamed-for-littering

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jun, 2018 19:49 pm
  • அ+ அ-

நட்சத்திர தம்பதி அனுஷ்கா சர்மா, விராட் கோலி எப்போதுமே இஸ்டாகிராம் புகைப்படங்களுக்குத் தான் வைரலாவர். இந்தமுறை ஒரு வீடியோவை பகிர அது அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸை திரும்பக் கொண்டு வந்துள்ளது. அர்ஹான் சிங் என்ற நபர் அனுஷ்கா, விராட் கோலி தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

காரணம் என்ன?
மும்பையில் தனது சொகுசு காரில் பயணித்துக் கொண்டிருந்த அர்ஹான் சிங் ஒரு பிளாஸ்டிக் பையை வெளியே வீசியிருக்கிறார். அவரது காரின் அருகே வந்த இன்னொரு சொகுசு காரில்தான் அனுஷ்காவும் அவரது கணவர் விராட் கோலியும் பயணித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பையை வீசி எறிந்ததற்காக அனுஷ்கா அர்ஹானை சரமாரியாக வசைபாடியிருக்கிறார். இதனை விராட் கோலி தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார். 

அனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்ததோடு, "இந்த நபர் சாலையில் குப்பையை வீசி எறிவதைப் பார்த்தேன். சரியான பாடம் புகட்டினேன். சொகுசுக் காரில் பயணித்தால் மூளை வேலை செய்யாதோ என்னவோ? இப்படிப்பட்டவர்கள் நம் தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்வார்கள் என நினைக்கிறீர்களா? இதுபோல் ஏதாவது தவறு நேர்வதைப் பார்த்தால் இதைப் போலவே செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவை சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்து கருத்துகளைப் பதிவிட்டனர். அனுஷ்கா , கோலி ரசிகர்கள் அர்ஹானை வறுத்தெடுத்தனர்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சமூக சிந்தனை தேவை என அனுஷ்காவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.

அதேவேளையில் சிலர், அனுஷ்கா சற்று காட்டமாக பேசியதாகவும் கருத்து தெரிவித்தனர். தனது வீடியோ வைரலானதை அறிந்த அர்ஹான் அனுஷ்கா கோலி தம்பதிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "ஹை. எனது வழக்கறிஞர்கள் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் அனுஷ்கா, கோலி. இப்போது பந்து உங்களிடம் இருக்கிறது. இப்போதைக்கு நான் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால் நியாயமாக உங்கள் பதிலை எதிர்பார்த்து நிற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

எது குப்பை தெரியுமா?!
அனுஷ்காவின் ட்வீட்டுக்கு அர்ஹானும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். சொகுசுக் கார் வழியாக தவறுதலாக வீசி எறியப்பட்ட குப்பை உங்கள் வாயில் இருந்து வார்த்தை வடிவத்தில் வந்த குப்பையைவிடக் குறைவானதே. அதைவிட விராட் கோலி அதை வீடியோவாக பதிந்து ஆன்லைனில் போஸ்ட் செய்தது இன்னமும் குப்பை. இதை எந்த லாப நோக்கத்துக்கு நீங்கள் செய்தீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால், உங்கள் வாயிலிருந்து வந்த குப்பை சற்றே விவகாரமானது" என பதிலடி கொடுத்திருந்தார்.

காங்கிரஸும் விளாசல்..
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ஜா, "ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது ஏற்கெனவே புகழின் உச்சியில் இருப்பவர்கள் இன்னும் வெளிச்சத்தை நாடத் தேவையில்லை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு விளம்பரம்தான் வேண்டும்" என்று கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அனுஷ்கா சர்மா ஸ்வச் பாரத் பிரச்சாரத்தின் தூதவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close