[X] Close

வாக்காளர்களை உதாசீனப்படுத்தாதீர்கள், அகங்காரத்துக்கும் அளவு இருக்கிறது: காங்கிரஸ் கட்சியை சாடிய பிரதமர் மோடி


  • kamadenu
  • Posted: 26 Jun, 2019 15:22 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மக்களவையில் தாங்கள் பெற்ற தோல்விகளை எதிர்க்கட்சிகள் மின்னனு வாக்கு எந்திரங்களில் மறைக்கிறார்கள். பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை கிண்டல் செய்வது வாக்களாரக்ளை உதாசீனப்படுத்துவதாகும் என்று பிரதமர் மோடி காட்டமாகப் பேசினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி காட்டமான விமர்சனங்களை வைத்தார். அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் மக்கள் மகத்தான தீர்ப்பளித்து எங்களை வெற்றி பெற வைத்துள்ளார்கள் அதை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்வது அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகும்.

pc.jpg 

பாஜக தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது, ஆனால், நாடு தோற்றுவிட்டது என்று பேசுவதும், காங்கிரஸ் கட்சி தோற்றால், நாடு தோற்கடிக்கப்பட்டதாகவும் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி என்றால் தேசம், தேசம் என்றால் காங்கிரஸ் கட்சியா. அகங்காரத்துக்கு அளவு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற பேச்சு, வாக்காளர்களை உதாசீனப்படுதுவதாகும்.

வயநாட்டில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது, ஆனால், ரேபரேலியில் தோல்விஅடைந்துவிட்டது, அது தேசத்தின் தோல்வியா. குறுகியமனோபாவம், ஏற்கமுடியாத கொள்கைகளைக் கொண்டவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், நீங்கள் வென்றுவிட்டீர்கள், தேசம் தோல்வி அடைந்துவிட்டது என்கிறார்கள். நமது ஜனநாயகத்தை இதற்கு மேல் அவமானப்படுத்த வேறு ஒன்றும் இல்லை.

17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட பெறமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்றுக்கொண்டு, தங்களை சுயபரிசோதனை செய்யும் நேரம். பாஜகவுக்கு கூடத்தான் ஒருநேரத்தில் 2 எம்.பி.க்கள் மட்டும் இருந்தார்கள். ஆனால், நாங்கள் எங்களின் தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்தோம். பணியாற்றினோம் இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். ஆனால் ஒருபோதும் தேர்தல் முறையை கேள்விக்குள்ளாக்கியதில்லை.

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள்தான் தங்கள் தோல்விகளை மறைக்க, மின்னணு வாக்கு எந்திரத்தின் பின் ஒளிந்துகொள்கிறார்கள். இது உங்களின் தொண்டர்களை நம்பிக்கை இழக்கச் செய்துவிடும்.

வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன என்று ஒருகாலத்தில் நாளேடுகளில் தலைப்புச் செய்தி வந்தது. ஆனால், இப்போது இவிஎம் எந்திரத்துக்கு நன்றி சொல்கிறோம், இப்போது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close