[X] Close

ஜார்கண்டில் கும்பல் வன்முறைக்கு தப்ரேஸ் அன்சாரி என்ற நபர் பலியான விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 19:24 pm
  • அ+ அ-

ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்பவரைக் கும்பல் ஒன்று தாக்கியதையடுத்து அவர் பலியான சம்பவம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்ப இந்தக் கொலையை விசாரிக்க ஜார்கண்ட் போலீச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

 

கடந்த ஜூன் 18ம் தேதி இரவு பைக் ஒன்று திருட்டுப் போனதாக சந்தேகத்தின் அடிப்படையில்  தப்ரேஸ் அன்சாரியை கும்பல் ஒன்று பிடித்து அடித்து உதைத்தது.  தான் திருடவில்லை என்று அவர் கெஞ்சிக் கூத்தாடியும் கும்பல் தாக்குதல் குறையவில்லை, அவரை அடித்து உதைத்ததோடு அவரை ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்’ என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தியதும் வீடியோ காட்சிகளாகி வைரலானது. இந்த வீடியோவில் கும்பல் அடி உதைக்குப் பயந்து ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்ரு தப்ரேஸ் கோஷமிட்டதும் கேட்டது.

 

மறுநாள் காலை போலீஸார் தப்ரேஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கோர்ட்டு சிறைக்கு அனுப்பியது. ஆனால் ஜூன் 22ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைய மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தது.

 

சம்பவத்துக்குப் பிறகு தப்ரேஸுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.

 

தப்ரேஸ் அன்சாரி ஒரு தினக்கூலி, அன்றைய தினம் ஏதோ வேலை தொடர்பாக தன் கிராமத்துக்கு வந்துள்ளார் அவர். குடும்ப உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முக்கியக் குற்றம்சாட்டப்பட்ட பப்பு மண்டல் மற்றும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 

அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் கூறுமாறு துன்புறுத்தினரா என்று உதவி தலைமை ஆய்வாளர் குல்தி திவேதியிடம் தி இந்து (ஆங்கிலம்) கேட்ட போது, “விசாரணை நடைபெற்று வருகிறது, ஆகவே இப்போது கருத்து கூறுவது சரியாக இருக்காது, ஆனால் சம்பவத்தின் அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close