[X] Close

உ.பி. மாவட்டக் கட்சிக் கமிட்டிகளைக் கலைத்தது காங்கிரஸ்: கட்சிக்குள் களையெடுப்பு நடவடிக்கைக்கு 3 நபர் குழு அமைக்க முடிவு


3

  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 18:13 pm
  • அ+ அ-

-பிடிஐ

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் படுதோல்விகளைச் சந்தித்ததையடுத்து கட்சிக்குள் ஒழுங்கின்மைகள் குறித்த புகார்கள் குவிய காங்கிரஸ் மேலிடம் உ.பி. காங்கிரஸ் மாவட்ட கமிட்டிகள் அனைத்தையும் கலைத்தது.

 

தேர்தல் நேரத்தில் ஒழுங்கின்மையாக நடந்து கொண்ட, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்கள் குறித்த புகார்களை விசாரிக்க 3 நபர் குழு ஒன்றை அமைக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

காங்கிரஸ் உ.பி. கிளையில் பெரிய அளவில் களையெடுப்பு நடவடிக்கை தேவைப்படுவதாக உணர்ந்த அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உ.பி. கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளதாக கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் வரவுள்ள நிலையில் பணிகளை மேற்பார்வையிட, ஒழுங்கமைக்க காங்கிரஸ் கட்சி இருநபர் குழு ஒன்றையும் அமைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

 

உ.பி.கிழக்குப் பகுதியில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்காக அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் அஜய் குமார் லல்லு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

உ.பி.யில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் வருகின்றன.  இதற்காக காங்கிரஸ் தீவிரமாக சில நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது.

 

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யில் 80 இடங்களில் காங்கிரஸ் கட்சி ரே பரேலி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கட்சித் தலைவர் ராகுல் காந்தியே தன் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close