[X] Close

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயிலுக்கு 39 சதவீத இடம் மட்டுமே கையகம்: கெடு முடிந்தது


39

  • kamadenu
  • Posted: 22 Jun, 2019 17:23 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் உருவாக்கப்பட உள்ள பிரமதர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவைப்படும் 1,380 ஹெக்டேர் நிலத்தில் வெறும் 39 சதவீதம் மட்டுமே இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து நிலங்களையும் கையகப்படுத்த வேண்டும் என்று அரசு கூறியிருந்தபோதிலும், அந்த காலக்கெடு முடிந்து 6 மாதங்கள் ஆகியும் நிலம் கையகப்படுத்தவில்லை.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் இயக்குவது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் கோடியாகும்.

இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்தத் திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் தொடக்கக் கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி (ஜேஐசிஏ) விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்தும் முறை சட்டத்துக்கு உட்பட்டு இல்லை. தீவிரமான முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

modi-abe-jpg.jpg 

இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து தேசிய அதிகவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) அமைப்பின் மூத்த அதிகாரி கூறியதாவது:

''மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்காக தேவைப்படும் நிலங்களில் இதுவரை 39 சதவீதம் நிலங்களே கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் சேர்த்து 1,387 ஹெக்டேர் நிலம் தேவை. அதில் 537 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தியுள்ளோம்.

குஜராத் மாநிலத்தில் 940 ஹெக்டேர் தேவைப்படும் நிலையில், அங்கு 471 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 431 ஹெக்டேர் தேவைப்படும் நிலையில், 66 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தாத்ரா நகர் ஹவேலியில் 9 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், அங்கு இதுவரை ஒரு ஏக்கர் நிலம்கூட கையகப்படுத்தவில்லை.

எங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளாகவே அனைத்து நிலங்களையும் கையகப்படுத்த அரசு உத்தரவிட்டது. ஆனால்,முடியவில்லை.

மும்பையில் பந்த்ரா, குர்லா, ஷில்பாட்டா இடையே பூமிக்கு அடியில் சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைத்தல், இரட்டை ரயில் பாதை அமைக்க சுரங்கப் பாதைகளை அமைக்கும் எந்திரம், ஆஸ்திரேலிய முறைப்படி சுரங்கம் அமைத்தல் ஆகியவற்றுக்கு இயந்திரங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

மும்பையில் போய்சர் மற்றும் பிகேசி இடையே 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதில் 7 கி.மீ.க்கு கடலுக்குள் பாதை செல்கிறது.

மேலும், மும்பை, அகமதாபாத் இடையே பல்வேறு சிவில் பணிகள் தொடங்குவதற்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. குஜராத்தில் வாபி, பிலிமோரா, சூரத், பஹ்ருச் ஆகிய நகரங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது''.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close