[X] Close

யோகா கொண்டாட்டங்களில் பங்கேற்காத பிஹார் முதல்வர்: உடன்பாடில்லாததுதான் காரணமா?


  • kamadenu
  • Posted: 21 Jun, 2019 18:24 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களிலிருந்து முதல்வர் நிதிஷ் குமார் விலகியே இருந்தார். இதற்கு யோகாவை அரசியல் பிரச்சாரக் கருவியாக்குவதில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு உடன்பாடில்லாததுதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும் பாட்னாவில் பாட்டில்புரா விளையாட்டு வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் இதர முக்கிய அமைச்சர்களும் மற்றும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

யோகா தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாநிலங்களில் ஆளும் பாஜக கூட்டணித் தலைவர்களும் பொதுமக்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் நாட்டின் முக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து கூட்டணிக் கட்சியினரிடையே கேள்வி எழுந்துள்ளது. 

முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் பேசுகையில், ''நிதிஷ் குமார் யோகா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை'' என்று தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர்கள், தங்கள் கட்சி ஒவ்வொரு நாள் காலையும் யோகா செய்வதை ஆதரிப்பதாகவும் மக்களுக்கு யோகா விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஆதரிப்பதாகவும் அதேநேரம் அரசியல் காரணங்களுக்காக இதை பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தினால் அதைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close