[X] Close

ஒருநாடு ஒரே தேர்தலுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.: காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு


  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 16:17 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

ஒருநாடு ஒரே தேர்தல் எனும் திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசிக்கக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் கட்சியின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயம் மட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இவை குறித்து விவாதிக்கவும், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசவும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

bjp.jpg 

இந்தக் கூட்டத்துக்குப் பின் நாளை எம்.பி.க்களுக்கு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக தலைவர் முக ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ்,  ஆகியோர் தவிர்த்துவிட்டனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஒருநாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தில் சமாஜ்வாதிக் கட்சிக்கும் உடன்பாடு இல்லாத காரணத்தால், அந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவும் பங்கேற்கமாட்டார் என்று அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜேடியு கட்சித் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார்,  தேசிய மாநாட்டுக்கட்சி சார்பில் பரூப் அப்துல்லா, சுக்பீர் சிங் பாதல், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், மெகபூபா முப்தி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close