[X] Close

எதிர்க்கட்சிகளுக்கு பதிலாக சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறலாம்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 12:44 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வழிகாட்டும் முன், சொந்தக் கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறலாம் என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி, எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர். பிரதமர் மோடி நேற்று பேசுகையில், " ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். எண்ணிக்கையை பற்றி எதிர்க்கட்சிகள் கவலைப்படக் கூடாது, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுகிறீர்களா என்பதுதான் முக்கியம் " எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

ஒரு நாடு, ஒரு தேர்தல் குறித்து நாளை  பிரதமர் மோடி அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் பேச இருப்பது, முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின அணுகுமுறை, செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " பிரதமர் மோடி நேற்று கூறிய அறிவுரைகள் அவரின் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும், ஜூனியர்களுக்கும் என்றால் அது நிச்சயம் பயன்படுத்தும். ஆனால் பிரதமர் மோடியின் அறிவுரைகளை பெரும்பாலான நேரங்களில் அவர்களின் தலைவர்களை கடைபிடிப்பதில்லை. இந்த கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகளிடம் இன்னும் நாங்கள் தொடர்பில் இ ருக்கிறோம், விரைவில் மத்தி்ய அரசின் ஒருதேசம், ஒரு தேர்தல் குறித்துப் பேசுவோம். பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுவதற்கு பதிலாக, அவர்களின் சொந்த கட்சியினருக்கு கூறலாம்.

ஜனநாயகம் என்பது கட்சிகள் வைத்திருக்கும் எம்.பிக்களை அடிப்படையாக வைத்தது இல்லை. இது மக்களின் கருத்துக்கள், விவாதிகள் மூலம் ஜனநாயகம் பிறக்கிறது. மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குறித்து சோனியா காந்திதான் முடிவு செய்வார் அவருக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close