[X] Close

சசிகலாவை முன்கூட்டி விடுவிக்க கோரிக்கை: விடுக்கவில்லை டிடிவி தினகரன் தகவல்


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 09:06 am
  • அ+ அ-

-இரா.வினோத்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சந்தித்து பேசினார்.

சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் தோல்வி குறித்து டிடிவி தினகரனிடம் சசிகலா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இருவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு சிறைவாசலில் காத்திருந்த செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:சசிகலா நன்னடத்தை விதிமுறைகளின்படி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தியை நானும் ஊடகங்களில் பார்த்தேன். எங்களது தரப்பில் அவர் முன்கூட்டியே வெளியே வருவதற்கு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.

பரோலில் வெளியே வருவதற்கும் நாங்கள் விண்ணப்பிக்கவில்லை. தற்போது அதற்கான தேவையோ, காரணமோ எழவில்லை. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எடப்பாடி பழனிசாமி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேட்டூர் அணை உட்பட அனைத்து அணைகளையும் சரியாக தூர்வாரவில்லை. இதனாலேயே கர்நாடக அரசு கடந்த ஆண்டு திறந்துவிட்ட காவிரி நீர் அதிகளவில் வீணாக கடலில் கலந்தது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close