[X] Close

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல்: 9 வீரர்கள் காயம்


9

  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:08 am
  • அ+ அ-

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படை வாகனம் மீது தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமை இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் நேற்று புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் வீரர்கள் சென்ற வாகனம் சேதமடைந்தது. 9 வீரர்கள் காயமடைந்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close