[X] Close

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம்: 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை: மம்தா பானர்ஜி எச்சரிக்கை


4

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 16:17 pm
  • அ+ அ-

மேற்கு வங்கத்தில் வேலை நிறுத்தம் செய்து வரும் அரசு மருத்துவர்கள் 4 மணிநேரத்துக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள மருத்தவகல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி மருத்தவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களாக போராட்டம் நடைபெறும் நிலையில் கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் சென்றார். அப்போது தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவர் கோபமடைந்தார்.

doc.JPG 

பின்னர் அவர் கூறுகையில் ‘‘மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சதி செய்கின்றனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close